தேன்கனிக்கோட்டை ஜூலை 10 அன்று தேன்கனிக்கோட்டையில் தேன்கனிக்கோட்டை வட்ட மற்றும் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். தலைவராக திரு. M.ஜனார்த்தனன் அவர்கள் செயலாளராக திரு.சங்கீத் வர்மா அவர்கள் மற்றும் பொருளாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக திரு. மூர்த்தி அவர்கள் துணைத்தலைவராக திரு. மாதேஸ் அவர்கள் துணை செயலாளராக திரு.சுரேஷ் அவர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு .ஆனந்தராஜ்
Bsc. அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் இந்தப் பதவியேற்பு விழாவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு. பிரபாகரன், மாவட்ட செயலாளர் திரு. நாராயணன், மாவட்ட பொருளாளர் திரு. மாதேஷ், மாவட்ட அமைப்பாளர் திரு. முனிராஜ், மாவட்டத் துணைத் தலைவர் திரு. ரவிவர்மா, ஓசூர் நகர தலைவர் திரு.சிவக்குமார், நகர செயலாளர் திரு. ஆனந்த், நகர பொருளாளர் திரு உமாசங்கர், ஓசூர் நகர அமைப்பாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேன்கனிக்கோட்டை செய்தியாளர்
M. ஜனார்த்தனன்