திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் அகில இந்திய போயர் மகளிர் முன்னேற்ற கழகம் சார்பில் விஜயலட்சுமி என்பவர் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அகில இந்திய போயர் மகளிர் முன்னேற்ற கழகம் தமிழக முழுவதும் செயல்பட்டு கொண்டு வருகிறது எனவும்,தங்களது கழகத்தில் எங்களது போயர் மகளிர் அல்லாமல் அனைத்து தெலுங்கு பேசும் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல திரைப்பட நடிகை கஸ்தூரி பொது மேடையில் பேசும் பொழுது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து தெலுங்கு பேசும் மக்களையும் பற்றி தவறான பொய்யான மற்றும் தரக்குறைவான விமர்சனங்களை நேரடியாக பொதுவெளியில் பேசி உள்ளார்.அவர் பேச்சால் தெலுங்கு பேசும் அனைத்து மக்களின் கௌரவமான வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும், அவரது பேச்சின் காரணமாக அனைத்து தெலுங்கு பேசும் மக்களும் மிகுந்த மன உளைச்சலுடன் ஆளாக்கி உள்ளனர் எனவும்,
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு அல்லாத மக்களால் பேசு பொருளாக ஆக்கப்பட்டு மிகவும் கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருவதாகவும்,தங்களது குழந்தைகள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் மிகுந்த கேளிக்கும் அவமானத்திற்கு பேச்சுக்கும் உள்ளாகி உள்ளதாகவோ தெரிவித்துள்ளார். இது பற்றி நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட திரைப்பட நடிகை கஸ்தூரி மீது கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..செய்தியாளர் ; ரூபன்ராஜ்