திரு.வி.க அரசு கலை கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த தற்காலிக உடற்கல்வி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதை தொடர்ந்து போராட்டத்தின் போது இந்திய மாணவர் சங்க தோழர்களும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் பெண் உடற்கல்வி பேராசிரியரை நியமித்திட,கல்லூரியில் ICC குழு அமைத்திட , சிசிடிவி கேமராக்கள் பொருத்திட வலியுறுத்தி, கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.அதை தொடர்ந்து கல்லூரி முதல்வரின் முன்னிலையில் திருவாரூர் ஒன்றிய காவல் ஆய்வாளர் அவர்கள் கலந்துக் கொண்டு மாணவர் சங்க தோழர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அமைப்பின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று விரைவாக அதை செய்து தருவதாக உறுதி அளித்த பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.இதில் மாநில துணை தலைவர் பா.ஆனந்த் , மாவட்ட செயலாளர் பா.லெ.சுகதேவ் , மாவட்ட துணை தலைவர்கள் வீ.சந்தோஷ் ,பா.விக்கி மற்றும் கிளை நிர்வாகிகள் செல்வா , ராகேஷ், ஹேமா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அ.காவியன்
செய்தியாளர்