திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் இன்று திருச்சிமாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஏராளமான மனு கொடுத்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- அடிமனை பிரச்சனை சம்பந்தமாக பலமுறை மனுகொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக்கண்டித்து இறுதிகட்டமாக தாங்கள் தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆனையரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உதவி ஆணையர்/செயல் அலுவலர் பிறப்பித்த ந.க.எண் 234/1433/அ-4 என்ற செயல்முறை கடிதத்தை ரத்துசெய்யகோரி தீர்வு காணவேண்டும். என்று மனு அளித்துள்ளோம்.
இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லையென்றால் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் முதற்கட்டமாக வீதிக்கு வந்து போராடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த மனதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலூர் மகேந்திரன் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.கலைமணி, குருசுப்பிரமணியன், ஞானமூர்த்தி, அனந்தராமன், நாகராஜ்,ரவி, கண்ணன், தனசேகர், வைத்தியநாதன், தேவி, சந்திரசேகரன், புஷ்பராஜ் ,ரகுராமன் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.