திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் இவர் பல்வேறு மக்கள் நலப்பணித் திட்டங்கள் மூலமாக தொகுதி மக்களிடம் மிகவும் பிரபலமானவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாநில அம்மா பேரவையின் இணைச் செயலாளராகவும் பதவியில் உள்ளார் இவர் தற்பொழுது உங்களோடு நான் என்கின்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக பொதுமக்களின் அடிப்படை தேவைகளான ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் ஆதார் அட்டையில் திருத்தங்கள் மற்றும் முதல்வர் காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றார்

அந்த வகையில் இன்று அவருடைய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டமும் அரசு பணியாளர் அட்டைகள் சரிபார்ப்பு முகாமும் நடைபெற்றது இந்த முகாமில் ஆண்டாள் தெரு என் எஸ் பி சாலை போன்ற முக்கிய தெருக்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

