தெற்கு இரயில்வே சார்பாக இன்று அக் 24 ந்தேதி திருச்சிராப்பள்ளி சந்திப்பு இரயில் நிலையம் அருகேயுள்ள குட்செட் யார்டு பகுதியில் ரயில் விபத்து நடைபெற்கால் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா்கால மீட்பு நடவடிக்கை பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
முதலில் குட்செட் மேம்பால பகுதியில்
சென்று கொண்டிருந்த ஒரு ரயில் தடம் புரண்டு ரயில்பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்று மோதி கவிழ்ந்து கிடப்பது போன்று சித்தரிக்கப்பட்டு அதில் இருந்து தீ மளமளவென என பரவுவது போன்றும் இதையடுத்து

அப்பகுதியினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்க, ரயில்வே பாதுகாப்புபடை, தேசிய பேரிடா் மீட்புபடை, தீயணைப்புத் துறையினர், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட தனியார் ஆம்புலன்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்

தீயணைப்புத் துறையினர் ரயில் பெட்டியில்
தீ வரும் பகுதியில் தீயணைப்பான் கொண்டு தீயை அணைத்து தீயை கட்டுபடுத்த
மருத்துவ குழுவினர் இடுபாடுகள் சிக்கியவர்களை போல் சித்தரிக்கப்பட்டவர்களை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றுகின்றனர்.
பின்னர் பேரிடர் மீட்பு குழுவினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து ரயில் பெட்டியில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்வது,

மேலும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்று ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பயிற்சியில் ஈடுபட்ட பிறகு
ரயில்வே பணியாளர்கள் தடம் புரண்ட பெட்டிகளை நேர்த்தியாக இடம் மாற்றுவது, கடுமையாக சேதம் அடைந்த பகுதிகளை வெட்டி எடுத்து, தண்டவாளங்களை சரி செய்வது, மின்சார கேபிள்களை மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த ரயில் விபத்து ஒத்திகை நிகழ்ச்சி முதலில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்த இது ஒரு ஒத்திகை நிகழ்வு என அறிந்து நிம்மதி பெருமூச்சி விட்டனர்.
எம்..எஸ்.மதுக்குமார்.

