Wednesday, February 5, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஒருநாள் அடையாள போராட்டம்………….

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஒருநாள் அடையாள போராட்டம்………….

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 392 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி நாலாம் தேதி தேர்வு நடத்தியது . அதனைத் தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம் அதன்பின் ஜூன் மாதம் நடைபெற்ற சான்றிதழ் சமர்ப்பிப்பிலும், சரிபார்த்தலிலும் மறந நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டோம் . ஜூலை மாதம் நடைபெற்ற வெளியிட்ட உத்தேச தேர்வு பட்டியலிலும் நாங்கள் இடம் பெற்றோம் . தற்போது உத்தேச பட்டியல் வெளியாகி ஏழு மாதங்கள் ஆகிய போதும் எங்களுக்கு இதுநாள் வரை கலந்தாய்வு நடைபெறவில்லை . ஆனால் எங்களுடன் தேர்ச்சி பெற்று ஆதி திராவிட பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் எங்களுக்கு முன்பே பணியில் சேர்ந்து விட்டனர் . மேலும் பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான இத்தேர்வு 10 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றதால் தனியார் பள்ளியில் வேலை பார்த்த நாங்கள் வேலையை திறந்து விட்டு படித்தோம் . மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் அதிகமானோர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர் . எனவே அவர்களின் பனிக்காலம் மிகவும் குறைவு தற்போது ஆண்டு பொது தேர்வு காலம் என்பதால் தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் , எங்களின் வாழ்வாதாரமும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .

எனவே எங்கள் குடும்ப வாழ்வாதாரம் கருதி எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்சிக்கான(BT/BRTE) கலந்தாய்வினை உடனே நடத்திட இந்த அரசனது 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் படி இந்த ஒரு நாள் அடையாள கருப்பு தின அடையாளப் போராட்டமாக அறிவிக்கிறோம் . இவ் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் . திருச்சி செய்தியாளர் டி கோபிநாத்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments