திருச்சி மாநகரம் பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்