Saturday, December 21, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருச்சி புறக்காவல் நிலையம் மீது மோதிய கனரக லாரி நூல் இடையில் உயிர்தப்பிய காவல்துறை...

திருச்சி புறக்காவல் நிலையம் மீது மோதிய கனரக லாரி நூல் இடையில் உயிர்தப்பிய காவல்துறை அதிகாரி…

திருச்சியில் இன்று காலை சுமார் 8 மணியளவில் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி கனரகலாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.இதனை பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் வட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.

லாரி திருச்சி குடமுருட்டி பாலம்
அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் இடது புறம் இருந்த புறக் காவல் நிலையத்தின் மீது மோதியது.
இதில் புறக்காவல் நிலையம் முற்றிலுமாக சேதம் அடைந்தது.
இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
விபத்தின் போது அங்கு பணியில் இருந்த நாகராஜ் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் இடிப்பாடுகளில் சிக்கிக் கொண்டார்.
ஆயினும் அவர் எந்த காயமும் இன்றி உயிர்த்தப்பினார்.


இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை காவல் நிலைய போலீசார் இடிபாடுகளை அகற்றினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சுகுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கோயம்புத்தூரில் சிமெண்ட் லோடை இறக்கிவிட்டு திரும்பும் வழியில்,சற்று கண் அயர்ந்து விட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
மேலும் தொடர்ச்சியாக விடுமுறை இன்றி பணிபுரிந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறினார்.
விபத்து குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments