மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 6-வது மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூபாய் 6.10 கோடி மதிப்பீட்டில் திருச்சிராப்பள்ளி,

திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன்
மேயர் அன்பழகன், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மண்டல தலைவர் மு. மதிவாணன் மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன். துணை மேயர் ஜி. திவ்யா, மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, மாமன்ற உறுப்பினர் எஸ்.சிவக்குமார், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

