திருவெறும்பூர் கைலாஷ்நகரின் வின் நகர் மெயின்ரோட்டின் பத்திர பதிவு அலுவலகத்தின் அருகில் வார்டு 39 தை சேர்ந்த பகுதியில் மாநகராட்சிக்கும், அரகக்கும் சொந்தமான இடத்தில் தண்ணீர் தேக்கத் தொட்டி உள்ளது.தண்ணீர் தேக்கத் தொட்டியின் அடி நிலப் பகுதியில் வின் நகர் நலச் சங்கம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பும், அத்துமீறலாகவும் ஆஸ்பிட்டாஸ், காட போடால் இடம் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது. இந்த அத்துமீறல் செயலுக்கு அனுமதி வழங்கியது யார்? இது போன்ற அத்து மீறலான, ஆக்கிரமிப்பு செயலுக்கு யார் உடந்தை? இந்த விதிமீறலை அரசு அனுமதித்தால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தேக்கத் தொட்டிகளில் காலியாக உள்ள இடங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்ய முன் உதாரணமாக அமையாதா?
என பகுதி பொது மக்களும், சமூக ஆர்வலர்க்கும் போர்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த விதிமீறல் செயலுக்கு திருச்சி மந்திரி திறந்து வைத்ததாக கல்வெட்டும் உள்ளது. விதிமீறல்களையும் அரசு சொத்துகளை முறையாக காக்க வேண்டியவர்களே முறைகேடன ஆக்கிரமிப்புக்கு உடந்தையா என கேள்வி எழுத்துள்ளது. இதனை கண்டு கொண்டு மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் நடவடிக்கை எடுப்பார்களா?.