சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க நடை பயணம் .சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னோட்டமாக அமையும் திருச்சியில் வைகோ பேட்டி. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது நடைபயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது. முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமத்துவ நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
சமத்துவ நடை பயணம் தொடக்க விழாவிற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பேசுகிறார்.
ம.. தி.மு.க. முதன்மைச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வரவேற்று பேசுகிறார்.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்து பேசுகிறார்.
இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன்,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி,திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்த நடைபயணத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.
என்ன நடை பயணம் மதுரையில் பன்னிரண்டாம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சியின் நிர்வாகிகள் தான் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.பின்னர் தென்னூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
ஆலயங்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல… வைணவ சமயத்தினருக்கும் சைவ சமயத்தினருக்கும் பகுத்தறிவு கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டாலும் மட்டுமல்ல இந்த தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் 100 ஆண்டுகளாக மோதல் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்..
சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருபவர்களை நிர்மூலம் ஆக்குவதற்கு வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலில் இந்த துவா சக்திகள் ஈடுபடுகின்றனர்.
2022 பிப்ரவரி மாதம் அலகாபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மாநாட்டில் 32 பக்கத்தில் பிரகடனம் வெளியிட்டார்கள் அதில் நில வாசகங்களை கட்டும்போது தலையில் இடி விழுவது போன்று இருந்தது..
எவ்வளவு பெரிய ஆபத்து இந்தியாவில் ஏற்பட இருந்தார்கள் என்பதை நான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறேன்..
அதில் குறிப்பாக இனி இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்றுதான் அழைக்க வேண்டும்…
இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருப்பதை மாற்றப்பட்டு தலைநகரமாக இருக்க வேண்டும் இருந்தது..
கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இருக்கக் கூடாது..
இந்திகாம் சமஸ்கிருதம் தான் இந்த நாட்டினுடைய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என வேறு எந்த மொழிக்கும் இடம் அளிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது..
இதுபோன்று அபாய திருமண அறிவிப்புகளை வரப்போகும் மத்திய அரசு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்..
இதற்கு எந்தவித எதிர்ப்பும் ஆளும் பாஜக அரசோ நரேந்திர மோடியும் தெரிவிக்கவில்லை..
தமிழ்நாடு என்பது திராவிட இயக்கம் என்பதொடு மட்டுமல்ல… தமிழ் என்பதுதான் திராவிடம் என பல அறிஞர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்..
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்றவர்கள் சமய நல்லிணக்கத்தை பாதுகாத்ததாகத்தான் தமிழ் மொழி கா க்கப்பட்டது.. தமிழ்நாட்டினுடைய நலன்களை பாதுகாக்க ஸ்டெர்லைட் அலை, நியூட்ரினோ திட்டம், சீமைகருவேல மரங்களை போன்றவற்றிற்கு நடைப்பயணம் போராட்டம் போன்றவற்றின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக நீதிமன்றங்களில் போராடி பெற்றுள்ளோம்.
போற்று தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாக்க பல போராட்டங்கள் மூலம் வெற்றி பெற்றுள்ளோம்..
அதேபோன்று தற்போது சாதிய மோதல்கள் மத மோதல்களை தமிழகத்தில் உருவாக்க சிலர் பார்க்கிறார்கள் அதை தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோதரர்களாக ஒருவருக்கொருவர் எனக்குமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முழுமையாக வலியுறுத்தி நாளை தினம் திருச்சியில் இருந்து நடை பயணத்தை தொடங்க உள்ளேன்.
இந்த பயணத்திலும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வேன்.தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இந்நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம்.தினமும் 600 பேர் என்னுடன் நடை பயணத்தில் கலந்து கொள்வார்கள்.15 முதல் 17 கிலோமீட்டர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி,துணைப் பொதுச் செயலாளர்கள் டாக்டர் ரொகையா, தி.மு.ராஜேந்திரன்,
மாநில பொருளாளர் செந்திலதிபன்,செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி, அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ குருநாதன்,மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டி.டி.சி.சேரன்,பெரம்பலூர் மாவட்ட செயலாளர்ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

