திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உயிர்காக்கும் புதிய அதிநவீன (கேத் லேப்) இதய வடிகுழாய் சிகிச்சை பிரிவு ஆரம்பம்
திருச்சி அண்ணாசிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் (மருத்துவ பணியில்) சேவையாற்றி வருகிறது.

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல் முறையாக மருத்துவத்துறையில் ஓர் புதிய அதிநவீன அத்தியாயம் கேத் லேப் எனப்படும் (உச்சி முதல் உள்ளங்கால் வரை) ஏற்படக்கூடிய ரத்தக்குழாய் மற்றும் இதய நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய
புதியதோர் அதிநவீன மருத்துவ பிரிவு நேற்று முதல்
தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள், சிறுநீரக மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகள், எலும்பு மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இப்போது அதிநவீன (சீமென்ஸ்) கேத்லேப் தொடங்கப்பட்டுள்ளது. இது மேலும் பல நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உதவும். இதன் மூலம் இங்கே மூளை, நரம்பு, தண்டுவடம், இதயம், கை கால், ரத்தக்குழாய் அடைப்புக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டெண்ட் வைப்பது உள்ளிட்ட ரத்தக்கட்டியை எடுக்கும் ஒரு புதிய மருத்துவத்தை (நுண்துளை ஊசி மூலம்) சிகிச்சை செய்யப்படும் புதிய அதிநவீன சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர், பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில், திருச்சியின் மூத்த மருத்துவர் டாக்டர் எஸ்.பொன்னையா, திருச்சியின் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர்.ஆர்.சுந்தரராஜன், பாண்டிச்சேரி ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனை தலைவர், டாக்டர் ஜி.இளங்கோவன், தமிழ்நாடு இதயவியல் சமூகத்தின் தலைவர் டாக்டர் ஜவகர் பரூக், ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் தலையீட்டு ஆலோசகர்கள் நரம்பியல் நிபுணர் டாக்டர் எஸ்.அருண்பிரனவ், இருதயவியல் நிபுணர் டாக்டர் என்.கணேஷ், செருகுகுழல் நாளஞ்சார் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.ஆனந்த், கதிரியக்கவியல் நிபுணர் டாக்டர் பெரியகருப்பன்
உள்ளிட்ட மருத்துவத்துறையின் முன்னோடிகள், மருத்துவமனையின் அனைத்து பணியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.