துணை வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் நடவடிக்கை குழு சார்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. வேளாண்மை உழவர் நலத்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டியும் மூதுரிமை மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் பணியிட மாற்றம் வேண்டியும் விரிவாக்க பணியாளர்களுக்கு பொது பணி விதிகளை உருவாக்க வேண்டியும், வேளாண்மை திட்ட குழுவில் விரிவாக்க பணியாளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டியும் விரிவாக்க பணியாளர்களுக்கு (AAO. AHO, Aso, Dy. Ao-Dy. Ho உயர்கல்வி மூன்று ஆண்டுகளில் பதவி உயர்வு மற்றும் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நிர்வாக பயிற்சி மற்றும் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து ஆய்வு செய்யிற பயிற்சி வழங்க வேண்டியும் . நிரந்தர பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டியும், இரண்டு வருவாய் கிராமங்களுக்கு ஒரு AAO பணியிடம் உருவாக்க வேண்டியும். ஒற்றை சாளர முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டியும்,CCE,CES, ஆகிய பணிகளில் தொகை மற்றும் அறுவடை கூலித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டியும்.. உதவி விதை அலுவலர்களுக்கு கிடங்கு மேலாளர் பொறுப்பு வழங்குவதை தவிர்க்க வேண்டியும் விதை உற்பத்தி பணியில் சிப்பம் கட்டும் கூலி உயர்த்தி வழங்க வேண்டியும், மேலும் துணை வேளாண்மை அலுவலர் மற்றும் துணை தோட்டக்கலை அலுவலர்களுக்கு 50% பதவி உயர்வு மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையங்களில் துணை வேளாண்மை அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டியும், Dy.Ao.DY. Ho அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியருக்கு இணையான மேம்படுத்தப்பட்ட அடிப்படை ஊதியமான ரூபாய் 37,200 வழங்க வேண்டியும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து பல மரக்கன்றுகளை வட்டாரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து சிலவினங்களை வழங்க வேண்டியும், சென்னை மதுரை சேலம் நெல்லை கோயமுத்தூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பூங்கா அமைக்கவும் பராமரிக்கவும் ஒரு A.H.O என்கிற பணியிடம் உருவாக்க வேண்டியும், உழவர் சந்தைகளில் அரசு விடுமுறை நாட்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மற்ற நாட்களை ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அனைத்து உழவர் சந்தைகளிலும் wifi., Connection, Lap-computer வழங்க வேண்டியும், பணியிட மாறுதலில் முறைகேடுடுகளை தவிர்க்கும் பொருட்டு கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணியிட மாறுதல் மீது விசாரணை போர்வெல் சம்பந்தமாகவும் வேளாண்மை உழவர் நலத்துறையில் தற்கால பணியாளர் பணியாளர்களை நிரந்தரமாக வேண்டியும் ஏறத்தாழ 25 கோரிக்கைகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தலைவர் குணசேகரன் துணைத் தலைவர் விஜயகுமார், பொது செயளாளர் ஆனந்தன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேட்டி அளித்தனர்…..