கிருஷ்ணகிரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக நடைபெற்ற உள்ளரங்க கிரிக்கெட் போட்டி டர்ஃப் விளையாட்டு மைதானத்தில் 12/01/2025 அன்று நடைபெற்றது. 22 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் பரிசாக 10000 ரூபாய் இரண்டாம் பரிசாக 7000 ரூபாய் மூன்றாவது பரிசாக 3000 ரூபாய் வழங்கப்பட்டது. லைட் டென்னிஸ் பந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்கு 6 நபர்கள் வீதம் 5 ஓவர்கள் என விதிமுறை வகுக்கப்பட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை டர்ஃப் 24 ஸ்போர்ட்ஸ் நடத்தி கொடுத்தது. விளையாட்டு போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.சி.ஆர்.தினேஷ் ராஜன் டாஸ் போட்டு துவக்கி வைத்தார்.
M. நந்தகுமார்
கிருஷ்ணகிரி செய்தியாளர்