Thursday, August 21, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதமிழக முதல்வரின் தாயு மாணவர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி திருச்சியில் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வரின் தாயு மாணவர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி திருச்சியில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை, சுப்பிரமணியபுரம் பகுதியில்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை போக்கும் வகையில் சென்னை தண்டையார்பேட்டையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் மேல கல்கண்டார் கோட்டை, சுப்பிரமணியபுரம், ஆகிய பகுதிகளில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களை தேடிச் சென்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருவெறும்பூர் தொகுதிகள் 64 நியாய விலை கடை உள்ளது. இதில் 82 ஆயிரத்து 200 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இவர்களில் ஒருநியாய விலை கடைக்கு ஒரு வண்டி விகிதம் மொத்தம் 64 வாகனங்களில் திருவெறும்பூர் தொகுதியில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 ஆயிரத்து 268 குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரிடையாக வாகனங்களில் சென்று புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் வீடு தேடி வழங்கப்படுகிறது.

முதல் கட்டமாக இன்று 52 கடைகளில் 52 வாகனம் மூலம் வழங்கப்படுவதாகவும் நாளை 64 கடைகளிலும் முழுமையாக 64 வாகனங்களில் செயல்படுத்தப்படும் என்று திருவெறும்பூர் கூட்டுறவு துறை சார்பதிவாளர் கபிலன் கூறினார்.
இந்த விழாவில் மண்டலக்குழுத் தலைவர்
மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் சீதாலட்சுமி முருகானந்தம், பியூலா மாணிக்கம், திருச்சி சரக கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் முத்துலட்சுமி உட்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறும்போது:-

தமிழக முதல்வரின் இதய துடிப்பான இந்த திட்டம் உள்ளது சென்னையில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது இதில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடி நியாய விலை கடை பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழக அளவில் 34 ஆயிரத்து 809 நியாய விலை கடைகள் உள்ளது.
திருவெறும்பூரில் தொகுதியில் 52 வாகனம் மூலம் மாதம் தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு தேடி கூட்டுறவு துறை ஊழியர்கள் வினியோகம் செய்வார்கள்.
இந்த திட்டத்தின் வெற்றி ஊழியர்களின் கையில் உள்ளது யாரையும் விட்டு விடாமல் வழங்க
ஊழியர்களை வழிநடத்தும் அதிகாரிகளுக்கு நன்றி. இதுபோன்ற நல்ல திட்டங்களான நலம் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் போன்ற திட்டங்களை தமிழக முதல்வர் நடத்தி வருகிறார்.
தற்பொழுது முதல்வரின் தாயுமானவர் திட்டத்தையும் நடத்தி வருகிறார் என்று கூறினார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 207 பள்ளிகளும் மூடப்படுவதாக அறிவித்து உள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு,
மாணவர் சேர்க்கை பூர்த்தி அடையவில்லை, மாணவர்கள் சேரவில்லை என்றால் சுற்று வட்டார பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளியில் ஒருமாணவரும் சேரவில்லை என்றாலும் அல்லது ஒரு மாணவர் சேர்ந்தாலும் அதற்குரிய காரணம் குறித்து ஆராய்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த பள்ளியை செயல்படுத்துவதற்கு தான் முயற்சி செய்யப்படும் பள்ளிகள் மூடப்படும் என்று கூறுவது தவறான கருத்தாகும் அதை எந்த அரசும் செய்யாது. இவ்வாறு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments