அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து கட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர் அதில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கட்சியின் இணைப்பு பற்றிய ஆலோசனை ஒரு மாதத்திற்குள் தொடங்காவிட்டால் அடுத்த டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மிக முக்கிய இறுதி முடிவு எடுக்கப்படும். அந்த முடிவு தனி கட்சியாக இருக்கலாம் என்று அறிவித்துள்ளார். அந்த கட்சியின் பெயர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

