பல்வேறு சிக்கல்களில் சிக்கி மணல் குவாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தும் வகையில் நடந்து கொண்ட தஞ்சை சுரங்கத் துறை ஏ.டி மைன்ஸ் பிரியா திருவாரூர் மாவட்டத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த ஏ.டி மைன்ஸ் புவனேஸ்வரி தஞ்சை மாவட்ட ஏ.டி. மைன்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
தஞ்சைக்கு பொறுப்பேற்ற ஏ.டி மைன்ஸ் பிரியா யாரையும் மதிக்காமல் நடந்து கொண்டார் எஸ்.ஆர் குரூப்பை நேரடியாக பகைத்துக் கொண்டார்.

சிலரை தவிர யாரையும் குவாரி நடத்த விடவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வந்தது. அதே நேரத்தில் தஞ்சையில் முறைகேடாக நடைபெற்ற குவாரிகளை யார் எதிர்த்தாலும் அவர்களை நடத்த விடாமல் தைரியமாக நிறுத்தினார் என்கிற பெயரும் இவருக்கு இருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் புதிய அதிகாரியாக தஞ்சைக்கு வரவிருக்கும் ஏ.டி.மைன்ஸ் புவனேஸ்வரி பொறுப்புள்ள அதிகாரியாக நடந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி – செந்தில்நாதன்.