தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் நாற்று ஏற்றி வந்த சரக்கு வாகனத்தால் விபத்து. சென்னையிலிருந்து சுற்றுலா வந்த நான்கு பேர் உயிரிழப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த விஜயா என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சென்னை சேர்ந்த குமார் (52), துர்கா(32), நிவேனி சூர்யா (3) ஆகிய மூன்று பேரும் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில்
மோனிஷா, ஸ்டாலின், விக்னேஷ் ஆகிய மூன்று பேருக்கும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.