தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி ஒரு பார்வை
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் மன்னார்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளது.
மொத்த வாக்காளர்கள்
ஆண்கள் – 7,27,166.
பெண்கள் – 7,73,932.
மூன்றாம் பாலினம்- 128
கூடுதல்- 15,01,226.
வாக்குச்சாவடிகள் விவரம்
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 1,710 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 92 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்த வாக்குச்சாவடி மையம் குலுக்கல் முறையில் ஆர்ஓ க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2,050 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
2,080 கட்டுபாட்டு இயந்திரங்கள்.
2,221 ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள்.
தேர்தல் பணியில் 8,404 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 4000 காவல் துறையினர் உள்ளிட்டோர் அமர்த்தப்பட்டுள்ளன
வாக்குப்பதிவு பெட்டிகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டு
பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தஞ்சாவூர் குந்தவைநாச்சியார் மகளிர் கல்லூரியில் ஜூன் 4ம் தேதி எண்ணப்படவுள்ளது.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அந்தந்த தாலுக்கா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
பதட்டமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு.