தஞ்சை திமுக வில் உள்ள கவுன்சிலர்களின். மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11:30 மணி அளவில் தஞ்சை மாவட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடக்க இருப்பதாகவும் அதில் அனைத்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்கிற அவசர உத்தரவை அறிவித்து இருக்கிறார் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் இது தஞ்சை திமுகவினர் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் பட்சத்தில் ஏன் இந்த அவசர கூட்டம் என்று கட்சியின் சீனியர்கள் சிலரிடம் கேட்டதற்கு.

தஞ்சை திமுகவை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் ஒருவர் மீது தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், யாரும் அவருடன் ஒத்துப் போகாத நிலை தஞ்சையில் நிலவுவதாகும் சில முக்கியமான முடிவுகளை எடுக்க சில கவுன்சிலர்கள் ரகசிய கூட்டம் போட்டதாகவும் அது கட்சி தலைமைக்கு தெரிய வர அந்த நிலையை சீராக்க பிரச்சனையை முடித்துக் கொள்ள மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகருக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.
அதனால் இன்று சட்டமன்ற உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர், மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் அறிவாலயத்திற்கு வரவைத்து மாவட்ட செயலாளர் ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளி வருகிறது.
செய்தி – வெற்றி.