தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் காவல் சரக பகுதிக்கு உட்பட்ட ஊரணிபுரம் கடை வீதியில் புற காவல் நிலையம் நேற்று மாலை தொடங்கப்பட்டது புற காவல் நிலையத்தை ஒரத்தநாடு ஏ எஸ் பி சனாஸ், திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் இதற்கு முன்னதாக திருவோணம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் வரவேற்று பேசினார் மேலும் நிகழ்ச்சியில் ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுதா, மற்றும் காவலர்கள், மகளிர் காவலர்கள், கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சியில் ஊரணிபுரம் வர்த்தக சங்கத் தலைவர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், வெட்டுவாகோட்டை ஊராட்சி மன்ற தலைவர், ஊரணிபுரம் சிவனடியார் அறக்கட்டளை தலைவர், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் கடைத்தெரு வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இறுதியாக
தலைமை காவலர் முருகேசன் நன்றி கூறினார், ஊரணிபுரம் கடைவீதி பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வந்த புற காவல் நிலையம் திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத், சீரிய முயற்சியால் திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்து பேசினார்,