தஞ்சாவூர் அருகே பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்துக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர். ஆசிரியர் முத்துக்குமரனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.