தஞ்சை சீனிவாசபுரம் மலேசியன் சுந்தரம் நகை கடை உரிமையாளர் ராஜா தலை மறைவானதை அடுத்து பொதுமக்கள் டிஐஜியிடம் கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நகைக்கடையின் பூட்டை உடைத்து.

இன்று மதியம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை வீடியோ பதிவு செய்து சோதனையிட்டனர் அதில் எந்தவித ஆவணங்களும் தங்க ஆபரணங்களும் கிடைக்கவில்லை. தங்க முலாம் பூசப்பட்ட சில கவரிங் நகைகளும், சில மில்லிகிராம் உள்ள வெள்ளி நகைகளும் கிடைத்தன.

சிலரின் காசோலைகளும் அங்கு இருந்தன மற்றபடி அனைத்தையும் எடுத்து சென்று விட்டார் மலேசியா சுந்தரம் நகை உரிமையாளர் ராஜா.
இதனை எடுத்து காவல்துறை கடும் விசாரணையில் இறங்கியுள்ளது.
