அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ஆலயத்தில் உள்ள மரகத லிங்கத்திற்கு
17..12.25 புதன் இரவு பிரதோஷம் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்ற பின்பு கோவில் பூசாரி கோவிலின் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து வழக்கம்போல கோவில் பூசாரி இன்று வியாழன் காலை கோவிலை
திறந்து பார்த்து போது மரகத லிங்கம் காணாதது கண்டு அதிர்சியடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சக்கரவர்த்தி தலைமையில் போலீசார்
விசாரணை செய்தனர்.பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளதா என்றும் அதில் ஏதேனும் காட்சிகள் பதிவாகியுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.

பழமையான கோவில் மரகதலிங்கம் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எம்.எஸ்.மதுக்குமார்.

