HomeUncategorizedஜெயங்கொண்டம் அருகே அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு திரளாக வந்த...

ஜெயங்கொண்டம் அருகே அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு திரளாக வந்த மக்கள் குற்றசாட்டு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தில் உள்ள புதுத்தெருவில் ஐம்பதுக்க்கும் மேற்பட்ட இருளர் இன பழங்குடி மக்கள் வசித்து வரும் நிலையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்றும் பட்டா கேட்டு நீண்ட ஆண்டு காலமாக போராடி வருவதாகவும் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் திரளாக வந்து குற்றம் சாட்டினர். இதுமட்டுமின்றி கழிப்பறை வசதி, வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர். பின்னர் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் திரளாக வந்து ஜமாபந்தியில் குற்றம்சாட்டியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here