ஜாக்டோ— ஜியோ உயர் மட்டக் குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்கள் சார்பாக அனைத்து உயர் மட்டக் குழுவினரும் கலந்து கொண்டனர். பள்ளிகள் , கல்லூரிகள், அரசு ஊழியர்கள்.’ ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் .அரசின் கால தாமதத்தையும், கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றிட கோரி, போராட்டத்தையும், அதன் அவசியத்தையும் குறித்து ஜாக்டோ ஜியோ சார்பாக வரும் 10 11 2025 முதல் 14 11 2025 வரை விரிவான வாகன பிரச்சாரம் நடத்த இருப்பதாகவும் , 18 11 2025 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர் . பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் மேலும் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இலட்சக்கணக்கான அரசு ஊழியர் ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை வெற்றி கரமாக நடத்தப் போவதாக அறிவித்தனர் . அதன் பிறகும் தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைக்கு செல்வது குறித்தும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுப்பதாக அறிவித்தனர் . கோரிக்கைகள் அவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்தனர் . 1.4.2003க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்து ஊருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வு திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் . ஆசிரியர் தகுதி தேர்வான (TET) குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி 23 8 2010 க்கு முன்னதாக பணியாற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து அதாவது டெட் தேர்வுக்கு விளக்க அளித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு பற்றி உடனடியாக நல்ல முடிவு எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கேட்டுக்கொண்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல்நிலை ஆசிரியர்களுக்கு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குடல் கல்வி இயக்குனர் மற்றும் உடல் கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர் …… தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90% மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.2.2023 மற்றும் ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை எண் 76 வெளியிட்ட நாள் 30.9 .2024 அன்று அறிவித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். ‘ முது நிலை ஆசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசு பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் .’ களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும் என்றும் , கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு பேராசிரியர் பணி மேம்பாடு ஊக்க ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். சிறப்பு காலம் வரை ஊதியம் தொகுப்பு ஊதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஊர் புற நூலகர்கள் கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தொகுப்பு புதியதில் பணியாற்றும் MRB செவிலியர்கள் சிறப்பு ஆசிரியர்கள் அரசு தொழில் பயிற்சி நிலைய PPP & COE ஊழியர்கள் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டுமென்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் . அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதம் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டது ரத்து செய்ய வேண்டும் என்றும் மீண்டும் பழைய முறையில் 25 சதவிகிதமாக வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்,’ 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளது உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 2002 முதல் 2010 வரை தொகுப்பு புதியதில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பணிக்காலத்திற்கான காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் மேலும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர் . இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மேற்கண்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர் .
