சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் குடுமியாண்டி தோப்பு பகுதியில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. அப்போது கோவில் நிகழ்ச்சிக்காக பக்தர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது காற்றில் பரவிய தீ அருகில் உள்ள மாடியில் செயல்படாமல் மாடியில் இருந்த குடிசை உணவகத்தின் மீது விழுந்து தீ பற்றி குடிசை முழுவதும் எறிய தொடங்கியது . அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் இளைஞர்கள் இணைந்து பக்கத்து மாடியில் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர்.இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக ஈசிஆர் சாலை புகை மூட்டமாக காணப்பட்டது.