துறையூர் அருகே சித்திரப்பட்டி செல்லும் சாலையில் ஆபத்தான முறையில் மின் கம்பிகள் உரசி கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்றக்கோரி துறையூர் அருகே உள்ள சித்திரப்பட்டி கிராமம் இந்த கிராமத்திற்கு துறையூர் முசிறி பிரிவுசாலி ரவுண்டானாவில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் மின் கம்பி மீது சாலையோர புளிய மரத்தின் கிளைகள் படர்ந்து அடர்த்தியாக காணப்படுகிறது.
இதனால் தற்போது காற்று அதிகமாக அடிக்கும் காலம் என்பதால் மர கிளைகள் முறிந்து வில வாய்ப்புள்ளது.
மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்..
இச்சாலையானது சித்திரப்பட்டியில் இருந்து துறையூர் நகருக்கு செல்ல பிரதான சாலையாக உள்ளது.
இதில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு பிரதானமாக உள்ள சாலையில் மின் கம்பி மீது சாலையோர புளிய மரத்தின் கிளைகள் உரசி கொண்டிருப்பதால்
மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாக துறையூர் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை நடவடிக்கை எடுத்து சாலையோர புளிய மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தி சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
செய்தியாளர்: ரூபன்ராஜ்