Friday, July 4, 2025
No menu items!
HomeUncategorizedசமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் SDPI கட்சி சார்பாக நடைபெற்றது.

சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் SDPI கட்சி சார்பாக நடைபெற்றது.

18/03/2025 இன்று மாலை கிருஷ்ணகிரி ஸ்ரீ முருகன் மஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் SDPI கட்சி சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் SDPI கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஜாவித் பாஷா அவர்கள் வரவேற்புரையாற்றினார். SDTU தொழிற்சங்க மாநில தலைவர் முகமது ஆசாத் அவர்கள், SDPI மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ் அஹமது அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட கழக செயலாளர் KPM.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு காஜி கலீல் அகமது அவர்கள், அஹ்லே சுன்னத் வல் ஜமாத் செயலாளர் ஆடிட்டர் ஆசாத் அவர்கள், பூரா மஸ்ஜித் தலைவர் ஜாவித் பாஷா அவர்கள், தவுலதாபாத் சுன்னத் வல் ஜமாத் தலைவர் கவுஸ் ஷெரிஃப் அவர்கள், கோட்டை ஷாஹி மஸ்ஜித் துணை தலைவர் பாரூக் அஹமத் அவர்கள், லண்டன் பேட்டை மஸ்ஜித் அக்ஷா தலைவர் தாஜ் அவர்கள், நூர் மஸ்ஜித் தலைவர் குப்தார் அகமத் அவர்கள், அஇஅதிமுக நகர செயலாளர் கேசவன் அவர்கள், அஇஅதிமுக நகர துணை செயலாளர் குரு அவர்கள், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து நகரத் தலைவர் சிபகத்துல்லா அவர்கள், ஜம்இய்யத் உலாமா மாவட்டத் தலைவர் மௌலானா அல்தாப் அஹமத் சித்தீக் அவர்கள், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் சபியுல்லா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டதொகுதி ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர். இறுதியாக மாவட்ட பொது செயலாளர் அமைப்பு கலீல் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.

செய்தியாளர்:-

கிருஷ்ணகிரி நந்தகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version