கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் மணியம்பாடி, ஆலஹள்ளி,
ராயகோட்டை ஆகிய 3 கிளைகளில் மேதின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள்
தோழர்கள் மகாராஜன், வீரப்பா, ராமன், ஒன்றியக்குழு தோழர் எம்.துருவாசன் ஆகியார் தலைமையில், ஒன்றிய செயலாளர் தோழர் D.ராஜா முன்னிலையில் , மாவட்டச் செயற்குழு தோழர் C.P.ஜெயராமன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு தோழர் X.இருதயராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், மூத்த தோழர் S.R.ஜெயராமன், தோழர் நாராயணமூர்த்தி ,ஒன்றியக் குழு தோழர் உத்திரகுமார்
மற்றும் கிளை உறுப்பினர்கள்
பங்கேற்று சிறப்பித்தனர்.
ராயக்கோட்டை கிளை தோழர்கள்
தோரணம், பேனர், மைக்செட்.
இனிப்புகளோடு மேதின விழாவை
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்