Saturday, January 11, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedகாஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ், 67 ஆவது பிரத்தியேக கிளையை திருச்சி, சாஸ்திரி சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ...

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ், 67 ஆவது பிரத்தியேக கிளையை திருச்சி, சாஸ்திரி சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர், மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார்.

புதிய கிளையில் பனாரசி, படோலா, கோட்டா, காஞ்சிபுரம், பைத்தானி, ஆர்கன்சா மற்றும் குப்பதம் போன்ற பல்வேறு வகையான புடவைகள் உள்ளிட்ட பிரீமியம் தயாரிப்புகள் உள்ளன.

திருச்சி, 10 ஜனவரி 2025: காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ், தனது 67 வது, பிரத்தியேக கிளையை திருச்சி, சாஸ்திரி சாலையில் திறந்துள்ளது. இந்த புதிய கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர், மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார். இந்த கடையில் பனாரசி, படோலா, கோட்டா, காஞ்சிபுரம், பைத்தானி, ஆர்கன்சா மற்றும் குப்பதம் போன்ற பல்வேறு வகையான புடவைகள் உள்ளிட்ட பிரீமியம் தயாரிப்புகள் உள்ளன.

சாய் சில்க்ஸ் (கலாமந்திர்) லிமிடெட் (சாய் சில்க்ஸ் அல்லது எஸ்எஸ்கேஎல்) என்பது, 2019, 2020 மற்றும் 2021 நிதியாண்டில் (டெக்னோபாக் அறிக்கையின்படி) வருமானம் மற்றும் வரிக்கு பிந்தைய லாபத்தின் அடிப்படையில் தென்னிந்தியாவில் எத்னிக் ஆடைகளின், குறிப்பாக சேலைகளின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த புதிய எஸ்எஸ்கேஎல் ஃபார்மேட் ஸ்டோர் எங்கள் முழு அளவிலான பிரீமியம் பட்டுப் புடவைகள் மற்றும் காஞ்சிபுரம் புடவைகளை வழங்குகிறது. மூலோபாய ரீதியாக ஒரு பிரதான பகுதியில் அமைந்துள்ள புதிய ஸ்டோர், எங்கள் கிளஸ்டர் அடிப்படையிலான அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.

சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் நிர்வாக இயக்குநர் திரு. பிரசாத் சலாவடி கூறுகையில், “எங்கள் வரமகாலட்சுமி ஸ்டோர்கள் தனித்துவமான அனுபவத்தையும் வாடிக்கையாளர் சேவையையும் வழங்குவதாக நாங்கள் நம்புகிறோம். இது எங்கள் சேலைகள், பல்வேறு இருப்பு வைப்பு யூனிட்டுகளுடன் இணைந்து, வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்தை ஈர்க்கவும் தக்கவைக்கவும் உதவுகிறது. இங்கிருந்து, தென்னிந்தியா முழுவதும் 25 கூடுதல் ஸ்டோர்களை
திறகக உத்தேசித்துள்ளோம்.
இவை அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ளன’ என்றார்.

வரமகாலட்சுமி ரீடெய்ல் பிராண்ட் வடிவம் 2011 ஆம் ஆண்டு பெங்களூரு சிக்பெட்டில் முதல் கடை திறப்புடன் தொடங்கப்பட்டது. பின்னர் பெங்களூரு, ஐதராபாத், சென்னை, விஜயவாடா, நெல்லூர் தொடங்கப்பட்டது. போன்ற நகரங்களில்

வரமகாலட்சுமி ஸ்டோர்கள் மிகவும் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் காஞ்சிபுரம் கலாச்சாரத்தில் பிராண்டின் வேர்களை பிரதிபலிக்கின்றன. இது கைத்தறி புடவை வியாபாரத்தை புதுப்பித்து, காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மற்றும் பிற கைத்தறி மற்றும் நிகழ்வுகளுக்கான புடவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது.

சாய் சில்க்ஸ் என்பது கலாமந்திர், வரமகாலட்சுமி சில்க்ஸ், மந்திர் மற்றும் கேஎல்எம் ஃபேஷன் மால் உள்ளிட்ட நான்கு ஸ்டோர் வடிவங்களை கொண்டுள்ளது. இது சந்தையின் பல்வேறு பிரிவுகளுக்கு தயாரிப்புகளை வழங்குகிறது. இதில் பிரீமியம் எத்னிக் ஃபேஷன், நடுத்தர வருமான பிரிவினருக்கான எத்னிக் பேஷன் மற்றும் மதிப்பு-பேஷன் ஆகியவை அடங்கும். வெவ்வேறு விலைகளில் பல்வேறு தயாரிப்புகளுடன் அனைத்து சந்தை பிரிவுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளை வழங்குகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments