கடந்த சில நாட்களாக தஞ்சை மாநகராட்சியில் நடந்த கலவரங்கள் அனைவரும் அறிந்ததே, மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பிரச்சனை விபரீதமானதை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரை அழைத்து இந்த பிரச்சனையை முடித்துவிட்டு எனக்கு தகவல் சொல்ல வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து மீண்டும் பஞ்சாயத்து தொடங்கியது மொத்தம் திமுக கவுன்சிலர்கள் 36 பேர் கூட்டணி கவுன்சிலர்கள் ஆறு பேர் இவர்களில் முதலில் திமுக கவுன்சிலர்கள் 25 பேருக்கு தலா 5 லட்சம் விதம் மேயர் சார்பாக செட்டில் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கவுன்சிலர்களுக்கு ஒரு வாரத்தில் செட்டில் செய்யபடுவதாக கூறியிருக்கிறார்களாம்.

இதில் கூட்டணி கட்சியினருக்கு பணம் செட்டில் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் அவர்களும் செலவு செய்து கவுன்சிலராக இருப்பதால் அவர்களுக்கும் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம். மீதமுள்ள ஒன்பது அதிமுக கவுன்சிலர்களுக்கும் பணம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் அதிமுக வட்டாரத்தில் பேசினால் முன்னாள் ஆணையர் சரவணக்குமார் இருக்கும்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தது. அதில் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை கண்டிப்பாக நாங்களும் எங்களுக்கு வரவேண்டிய தொகையைக் கேட்டு போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்கின்றனர். எப்படியோ ஒரு வழியாக கவுன்சிலர்களுக்கு வர வேண்டியது வந்துவிட்டது .
இனி அமைதியாக இருக்குமா தஞ்சை மாநகராட்சி மன்ற கூட்டம் இல்லை மீண்டும் போர்க்களம் நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி-செந்தில்நாதன்.