Friday, October 10, 2025
No menu items!
HomeUncategorizedஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் உலகளாவிய மார்ஷியல் ஆர்ட் நிகழ்ச்சி...

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் உலகளாவிய மார்ஷியல் ஆர்ட் நிகழ்ச்சி…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உலகலாவிய மார்க்ஷியல் ஆர்ட் நிகழ்ச்சி ஆகஸ்ட் 31 ம் தேதி அன்று அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 1000 த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தற்காப்பு கலை நிபுணர் ரென்க்ஷி ரோஸ் டியோஜின் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 30 நிமிடங்கள் இடைவெளி விடாமல் கராத்தே நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் மற்றும் சினிமா நடிகர் கராத்தே ராஜா ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version