Thursday, August 21, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedஉங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் திருச்சியில் இன்று நடந்தது....

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் திருச்சியில் இன்று நடந்தது….

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 27,28 மற்றும் 53 ஆகிய வார்டுகளுக்கு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவது திட்டமிட்டு 15. 07 .2025 அன்று துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது .அதன் ஒரு பகுதியாக மண்டலம் 5 ,வாடு எண் 27, 28
ஆகிய வார்டுகளுக்கு அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்திலும், மண்டலம் எண். 4, பீமநகர்பகுதி வார்டு எண் 53 வது வார்டுகளுக்கு பி .எஸ் . எஸ் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமை மேயர் மு. அன்பழகன், ஆணையர் லி. மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்துபொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள். முகாமில் உள்ள 13 துறைகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43 சேவைகளின்அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பதிவு செய்யப்படுகிறது.
தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனு ககளையும் பெற்று அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எடுத்துரைத்தனர் .
இந்நிகழ்வில் மண்டலக்குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் உதவி ஆணையர்கள் சண்முகம் சென்னுகிருஷ்ணன் மற்றும் மேற்கு வட்டாட்சியர்
மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ்,கவுன்சிலர்கள் கலைச்செல்வி ஜெகநாதன், பைஸ் அகமது,கமால் முஸ்தபா,மாவட்ட பிரதிநிதி மணிவண்ணபாரதி,வட்டச் செயலாளர் தனசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள் .

திருச்சி மாநகராட்சி 53 -வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், மண்டல குழு தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன்,
கவுன்சிலர் கலைச்செல்வி ஜெகநாதன்,உதவி ஆணையர் சண்முகம், வட்டச் செயலாளர் தனசேகர் உள்பட பலர் உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments