Tuesday, December 2, 2025
No menu items!
HomeUncategorizedஇந்திய ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை...

இந்திய ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை…

இந்தியா ஒற்றுமை இயக்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் அன்பழகன் தலைமையில் குடிமை சமூகங்கள் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அரசமைப்பு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய சட்ட தினம் அரசு மற்றும் குடிமை சமூகங்கள் சார்பில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் 1949 நவம்பர் 26 அன்று நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்த அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் குடிமை சமூகங்கள் சார்பில் திருச்சியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் குடியுரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த அசாருதீன், வின்சென்ட் ஜெயக்குமார், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ஜோ.கென்னடி, குடிமக்கள் உரிமை பாதுகாப்பு மன்ற வழக்குரைஞர் கம்ரூதீன், தமிழ் புலிகள் கட்சி மண்டல செயலாளர் இரமணா, தமிழக மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெகன், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா மாநில செயலாளர் பஷீர் அகமது, சாமானிய மக்கள் நலக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், அன்புவீரமணி ஆகியோர் பங்கேற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version