Thursday, October 9, 2025
No menu items!
HomeUncategorizedஆண்டிமடம் அருகே பள்ளியில் மரக்கிளை முறிந்து மாணவி மீது விழுந்ததால் பரபரப்பு.

ஆண்டிமடம் அருகே பள்ளியில் மரக்கிளை முறிந்து மாணவி மீது விழுந்ததால் பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள நாகம்பந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ரோஷினி. இவர் காலை உணவு திட்டத்தில் உணவு சாப்பிட பள்ளிக்கு சென்ற போது அவ்வளாகத்தில் இருந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று திடீரென முறிந்து விழ மாணவி ரோஷினி சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.

தகவலறிந்து வந்த ரோஷினியின் தந்தை கலையரசன் ( மாற்றுதிறனாளி) தன் மகளை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தார். உடனடியாக மாணவிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பேசிய மாணவியின் தந்தை
என் பிள்ளை மரக்கிளை மேலே விழுந்ததில் மயங்கி கிடந்த போது பள்ளி நிர்வாகம் மரக்கிளை விழுவதெற்கெல்லாம் நாங்கள் என்ன? செய்யமுடியும் என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்கள் என்றார் வருத்தமுடன்.

பள்ளி மாணவி மீது மரக்கிளை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version