அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் திருச்சி தெற்கு மற்றும் கிழக்கு சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள், வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளர்கள் ராஜசேகர், செந்தில்நாதன் தலைமையில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியார்களுக்கு பேட்டி அளித்த அவர்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது உண்மை ஆனால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.
திமுக ஆட்சிக் காலத்தில் அறிவியல் பூர்வமாக ஊழல் நடப்பது உண்மை. டாஸ்மாக்கில் எவ்வளவு ஊழல் நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். திமுக ஆட்சியில் கழிவறை ஊழலும் நடந்திருக்கிறது.
டெல்லியை எடுத்துக் கொள்ளுங்கள் ஊழலுக்கு எதிராக கெஜ்ரவால் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர்கள் . இன்று அவரை ஊழலில் சிக்கி உள்ளார். இன்று டெல்லியில் என்ன நடந்தது என்பது இந்த நாடு அறியும். எனவே தொடர்ச்சியான திமுக ஊழல்கள் வருகின்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

எனவே வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் அப்போது தமிழகத்தினுடைய கடன்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அடைத்து ஊழல்கள் இல்லாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்க படும்.
திமுக என்ற தீய சக்தி ஆட்சி பொறுப்பிற்கு வரக்கூடாது என்ற ஒரே மனப்பண்மையில் வரக்கூடிய யாராக இருந்தாலும் நாங்கள் ஆதரவு அளிப்போம்.
திமுகவை எதிர்க்கும் அதிமுக வாக இருந்தாலும் நாங்கள் அவர்களை தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கும்.
நாங்கள் ஒரு அணியில் இணைவோமே தவிர ஒரே கட்சியாக சேர்ந்து நிற்போம் என்பது நடக்காது.
எங்களைப் பொறுத்தவரை அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான்.
அரசியலில் எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் உண்டு.
ஜெயலலிதா இறந்த காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வேண்டுமா. லேடி வேண்டுமா, என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார் இது ஒரு அரசியலுக்காக மட்டுமே தவிர வேறு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை மோடி ஜெயலலிதா ஆகிய இருவரும் சிறந்த நண்பர்கள்.
அண்ணா தன்னுடைய உரையில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார் மூன்றாவது மொழி எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அது வரும் என்று எனவே அதற்கான நேரம் வந்து இருக்கிறது அந்த மூன்றாவது மொழி ஹிந்தி தான் மும்மொழி கொள்கையில் ஏற்கனவே தமிழ் ஆங்கிலம் என்ற மொழிகள் இடம் பெற்றுள்ள நிலையில் ஹிந்தி என்பது மூன்றாவது மொழியாக உள்ளது. எனது மற்ற மாநிலங்களோடு இணைக்க கூடிய அந்த மூன்றாவது இணைப்பு மொழி ஹிந்தி மட்டும் தான்.
அண்ணா குறிப்பிட்டு கூறுகையில் மும்மொழி கொள்கையை ஏற்பதற்கு நாங்கள் தயார் தான், சென்னையில் குஜராத்தி மராத்தி போன்ற மொழிகள் போதிக்கப்பட்டது. அதேபோல் ஹிந்தியையும் பள்ளிகளில் கற்க்கலாம்.
ஒருவேளை அண்ணா தற்போது உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்வார்.
ரூபாய் என்ற எழுத்து மாற்றப்பட்டதற்கு பல்வேறு கண்டனங்கள் முன் வைக்கப்படுகிறது.
திமுகவின் செயல்பாடுகள் சிறுபிள்ளைகள் விளையாடும் போது தாங்கள் கையில் விளையாடக்கூடிய விளையாட்டுப் பொருளை உடைப்பது போன்று சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார்கள்.
ஒன்றிய அரசில் தமிழகத்திற்கான அனைத்து நிதி வழங்கப்படுகிறது ஆனால் திமுக ஒரு பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதேசமயம் நிதி வழங்கப்படவில்லை என்று கூறி வருகிறார்கள் எங்களுடைய தரப்பில் நாங்கள் நிச்சயம் நிதியை பெற்று தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்வோம்.
பெரியார் தாய் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறியிருக்கிறார். அதற்கு விளக்கம் தெரிவித்து ஒன்றிய அமைச்சர் கூறி இருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது பெரியார் சுதந்திரம் பெற்ற நாளை ஒரு கருப்பு தினம் என்று கூறினார் அவருடைய சீடராகிய அண்ணா அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
அப்பா அப்பா என்று முதலமைச்சரை தமிழ்நாடு முழுவதும் அழைக்கின்றனர் –
இந்த ஒரு வருஷம் அப்பாவாக அவர் இருந்து விட்டு போகட்டும். என தெரிவித்தார்.