`ஹேம்நாத் சித்ரவதையால் தான் நடிகை சித்ரா தற்கொலை!’- தந்தை காமராஜ் பரபரப்பு மனுத்தாக்கல்

0

ஹேம்நாத் உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பர் மாதம் பிரபல ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சித்ராவிற்கும் ஹேம்நாத்திற்கும் பதிவு திருமணம் நடந்திருந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஹேம்நாத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்குத் தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. மேலும், ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுத் தாக்கல் செய்த சித்ராவின் தந்தை காமராஜை, ஹேம்நாத் மனுவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சித்ராவின் தந்தை காமராஜ் பதில்மனுவை தாக்கல் செய்தார். அதில், சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து வருவார் ஹேம்நாத். ஹேம்நாத் உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார். எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here