ஸ்டெர்லைட்டில் இருந்து 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நெல்லை வந்தது!

0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக 5000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சுழல் மாசவடைதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை காலவரையின்றி மூடப்பட்டது.

இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டு ஆலை திறக்கப்பட்டது.

தற்போது இந்த ஆக்சிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை ஓட்டம் நிறைவடைந்து உற்பத்தி தொடங்கி தற்போது விநியோகப் பணிகளும் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 5,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோக பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ஆக்சிஜன் நிரப்பிய முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இந்த ஆக்சிஜன் தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்பரேஷன் சென்னை மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக உற்பத்தி செய்யப்படும் ஆட்சியில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நெல்லைக்கு சென்றடைந்த டேங்கர் லாரியில் இருந்த ஆக்சிஜன் அரசு மருத்துவமனை கிடங்கில் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here