`வேறு பெண்ணுடன் உல்லாசம்; கள்ளக்காதலனுடன் கணவனை கொன்ற மனைவி!’- டெல்லி அதிர்ச்சி

0

கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியின் நிஹல் விஹார் பகுதியை சேர்ந்தவர் அனில் ஷாவ்(35). இவரது புவனேஷ்வரி தேவி (31)என்ற மனைவி உள்ளார். அனில் ஷாவ் டெல்லியில் தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். இதற்கிடையில், தனது கணவர் அனில் வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளார் என மனைவி புவனேஷ்வரி தேவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், கணவன் – மனைவி இடையே கடந்த சில மாதங்களாக சண்டை ஏற்பட்டுள்ளது. புவனேஷ்வரி தேவி மீது அனில் ஷாவ் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

கணவர் இடையேயான சண்டையால் புவனேஷ்வரி, ராஜ் என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். நாளவைவில் புவனேஷ்வரிக்கும் ராஜிகும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தனது கணவர் தொடர்ந்து வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்துவருகிறார் என்று தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்த புவனேஷ்வரிக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனது கள்ளக்காதலன் ராஜ் உடன் இணைந்து தனது கணவர் அனிலை தீர்த்துக்கட்ட புவனேஷ்வரி திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 2-ம் தேதி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து புவனேஷ்வரி தனது கணவர் அனிலை கொலை செய்துள்ளார். ஆனால், தனது கணவர் அனில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் புவனேஷ்வரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால் அவரை தனது கள்ளக்காதலனுடம் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, புவனேஷ்வரியை கைது செய்த காவல்துறையினர், கொலைக்கு உடந்தையாக இருந்த புவனேஷ்வரியின் கள்ளக்காதலன் ராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here