வெளிநாட்டில் இருந்து திரும்பிய விஜய், விவேக் மனைவி, மகள்களை சந்தித்து ஆறுதல்

0

படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்று சென்னை திரும்பிய நடிகர் விஜய், மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக்கிற்கு கடந்த 16ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, நடிகர் விவேக் மரணமடைந்த அன்று நடிகர் விஜய் படப்பிடிப்பிறாக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்ததால் அவரால் விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமுடியவில்லை. இதற்கிடையில், படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவில் இருந்து நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார்.

இந்தநிலையில், ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று காலை மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்றார். அங்கு நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் விஜய்யுடன், நடிகர் விவேக் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here