வீட்டிற்கே சென்று பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

0

மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா வீடு திரும்பிய நிலையில் அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் தொடரந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இயக்குனர் பாரதிராஜா நேற்று மாலை வீடு திரும்பினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here