விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி!- முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார்

0

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர், தொழில் நிறுவனங்கள் மற்றும் திரையுலகினர் என ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here