`வலிமை’ அப்டேட்டை அரசியல்வாதிகளிடம் கேட்கிறீங்களே!’- ரசிகர்களை தெறிக்க விடும் அஜித்

0

வலிமை அப்டேட் கேட்டு அரசு, அரசியல் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது என நடிகர் அஜித் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கிரிகெட் வீரர் மொயின் அலியிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டிருந்தனர். எனது ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது.

வலிமை அப்டேட் கேட்டு அரசியல், விளையாட்டு என பல்வேறு இடங்களில் சிலர் செய்யும் செயலால் வருத்தம் ஏற்படுகிறது. ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். நம் செயல்களே, சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். முன்னரே அறிவித்தப்படி வலிமை படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் ரசிகர்களுக்கு வரும். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்ற கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here