வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் சரிவு!

0

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று 1018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

https://www.dailythanthi.com/breaking-news/–735253

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here