லாட்டரி விற்பனையில் மூழ்கி இருக்கும் பேராவூரணி..வியாபாரத்தை உற்சாகப்படுத்தும் எஸ்.பி ஏட்டு சிவா.. நடவடிக்கை எடுப்பாரா தஞ்சை எஸ் பி

0

பேராவூரணி பகுதிகளில் கஞ்சாவை தொடர்ந்து லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது இங்குள்ள காவல் துறையால் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட வேண்டும் என நம் அலுவலகத்திற்கு கடிதம் வர அதனை பற்றி விசாரித்தோம்.

கடிதத்தை அனுப்பியவர்களிடம் பேசினோம் “பேராவூரணி பகுதியில் கடந்த மாதம் கூட 700 கிலோ கஞ்சா சொகுசு வாகனத்தில் சிக்கியது அதற்கு பிறகு பேராவூரணி காவல்துறை தன் வேகத்தை கூட்டியது. ஆனால் தற்போது மந்தமான நிலையில் தான் செயல்படுகிறது. தஞ்சை மாவட்டத்தின் கடைசி பகுதி என்பதால் சமூக விரோதிகள் தங்கள் திட்டங்களை தீட்டுவதற்கு இந்த பகுதிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அதுவும் தற்போது கஞ்சாவை தொடர்ந்து லாட்டரி விற்பனை பேராவூரணியில் இருக்கும் டீ கடைகளில் கூட கொடி கட்டி பறக்கிறது. லாட்டரி விற்பனை செய்யும் சமூக விரோதிகள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு பேராவூரணியை பயன்படுத்தி விற்பனையை அதிகரித்து வருகின்றனர். விற்பனையை தடுக்க யார் முயற்சி செய்தாலும் பேராவூரணி காவல் நிலையத்தில் இருக்கும் எஸ்பி ஏட்டு சிவா அவர்கள் தடுத்து நிறுத்தி லாட்டரி விற்பனையை உற்சாகப்படுத்துகிறாராம்.

படத்தில் வருவது போல் பேராவூரணியில் எங்கு கேட்டாலும் காவல்துறையில் முதல் நபராக அடிபடும் பெயர் சிவா இவர்தான் பேராவூரணியின் ஆல்-இன்-ஆல் அழகுராஜா இவர் இல்லாமல் பேராவூரணியில் எந்த பணியும் நடப்பதில்லை. அது நல்ல பணியாக இருந்தாலும் சரி கெட்ட பணியாக இருந்தாலும் சரி இவர் தான் முடிவு செய்வாராம். காவல் நிலையம் எப்படி நடக்க வேண்டும் ஆய்வாளர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முடிவு செய்யும் நபராக இவர் தான் விளங்குகிறாராம். இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் மாவட்ட எஸ்.பி.க்கு வர இவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை எந்த பிரச்சனையும் தன் மீது இல்லாதவர் போல காட்டிக் கொண்டு காவல் நிலையத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறாராம். பொதுமக்கள் அனைவரும் பேராவூரணியில் இருந்து இவரை மாற்றி வேறு பிரிவுக்கு அனுப்ப வேண்டும் இவர் இருக்கும் வரை இங்கே கஞ்சா லாட்டரி மட்டுமல்ல அனைத்து விதமான சமூக விரோத செயல்களும் நடக்கும் அதனை தடுக்க யாராலும் முடியாது என்று அடித்து சொல்கின்றனர்.

எஸ்.பி. ரவளிப்பிரியா

மேலும் சில காவலர்களிடம் பேசினோம் ” நாங்கள் எல்லாம் அவரை ஒன்றும் சொல்ல முடியாது இந்த காவல் நிலையத்தில் அவர் வைப்பது தான் சட்டம் அவரை யாரும் இடமாற்றம் செய்ய முடியாது. கேட்டால் எனக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்று மிரட்டுகிறார். நாங்கள் என்ன செய்வது என்று வேதனையோடு முடித்தனர் அவரோடு பணிபுரியும் காவலர்கள்

எஸ்.பி.ஏட்டு சிவாவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை அவருடைய விளக்கத்தை அளித்தாலும் வெளியிட தயாராக இருக்கிறோம்..

அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி லாட்டரி இல்லாத பேராவூரணியை உருவாக்குவாரா தஞ்சை எஸ்.பி. ரவளிப்பிரியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.?

எஸ்.பி.ஏட்டு.சிவா.

செய்தி… தமிழ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here