ரூ.25 லட்சம் ரொக்கம்… சொத்து ஆவணங்கள் பறிமுதல்!- எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டில் சிக்கியது

0

முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளானர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். கடந்த ஜூலை 21ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஊழல் தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையில் ரூ.25,56,000 பறிமுதல் செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், அவர் முதலீடு செய்த நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் விமர்சித்திருந்தனர். மேலும், விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடுக்கும் நோக்கில் ரெய்டு நடைபெறுகிறது என்றும் கூறியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here