`ரூ.1.5 லட்சம் தரவில்லை; பொய் சொல்லி அவப்பெயர் ஏற்படுத்துகிறார்!’- பிரபல நடிகையும், ஓட்டுநரும் மாறிமாறி புகார்

0

நடிகை முமைத்கான் 1,5000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் ராகவா ராஜூ என்பவரும், தொகை முழுவதையும் கொடுத்துவிட்டேன் என்றும் தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார் என்றும் நடிகை முகைத்கானும் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் வசித்து வரும் நடிகை முமைத்கான் தமிழில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு, விஜய்யின் போக்கிரி, விக்ரமின் கந்தசாமி உள்பட பல்வேறு படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். இந்த நிலையில், முமைத்கான் 1,5000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் ராகவா ராஜூ என்பவர் புகார் கூறினார். அதில், முமைத்கான் கோவா செல்ல வேண்டும் என்று தனது காரை புக் செய்து அங்கு 3 நாட்கள் இருக்க வேண்டும் என்று கேட்டார். மூன்று நாட்களை 8 நாட்கள் ஆக்கிவிட்டு, தனக்கு தர வேண்டிய வாடகை பணமான, 15000 ஆயிரம் ரூபாயைத் தரவில்லை.தன்னைப் போல் மற்றொரு ஓட்டுநர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இதை சொல்கிறேன்” என்று கூறியிருந்தார். மேலும், முமைத்கான் அனுப்பிய போன் நம்பருடன் கூடிய முகவரி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்திய ரசீதுகள், ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த நடிகை முமைத்கான், ஹைதராபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள புஞ்சகட்டா காவல்நிலையத்தில் கார் ஓட்டுநர் ராகவா ராஜூ மீது புகார் அளித்தார். அதில், ஓட்டுநர் ராகவா ராஜூவுக்கு கொடுக்க வேண்டிய தொகை முழுவதையும் கொடுத்துவிட்டேன். தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜூ கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த புகாரையடுத்து, இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த புஞ்சகட்டா காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். தவறு யார் மீது இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here