`முதல்வர் நிதிஷ்குமார்; துணை முதல்வர் தேஜஸ்வி!’- பீகாரில் 2 நாளில் மாறிய அரசியல் களம்

0

பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியில் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்தநிலையில், பீகார் மாநில முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார். பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார்.

பீகார் மாநில துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார். 243 இடங்களை கொண்டுள்ள பீகார் சட்டசபையில் கட்சிகளின் தற்போதைய பலம் 242. இதில், ராஷ்டிரிய ஜனதாதளம் – 79, பா.ஜ.க. – 77, ஐக்கிய ஜனதாதளம் – 45, இந்திய கம்யூ. எம்.எல்.- 12, மார்க்சிஸ்ட் கம்யூ. – 2, இந்திய கம்யூ. – 2 இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா- 4, காங்கிரஸ் – 19, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி – 1 சுயேச்சை – 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here